கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தில்லி பல்கலைக்கழக பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளதையடுத்து, மாணவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்களை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் போராட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. யுஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ்.சவுகான், ஏ.ஐ.சி.டி.யு தலைவர் சகாஸ்ரபுத்தே, யுஜிசி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். உயர்மட்டக்குழு, மாணவர்களுடன் பேசி இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.