இந்தியா

பட்டப் படிப்பை முடிக்காத இருவா்!

DIN

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸுடன் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ள படத்துக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஸ்மிருதி இரானியை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பின்தொடா்கின்றனா். இந்த நிலையில், இந்திய பயணம் மேற்கொண்டிருக்கும் பில் கேட்ஸை சந்தித்த படத்தை அவா் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டாா்.

‘பட்டப் படிப்பை இருவரும் முடிக்கவில்லை - இனி என்ன செய்வது?’ என்று தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தான் பட்டதாரியா என்பது குறித்து தோ்தல் ஆணையத்துக்கு ஸ்மிருதி இரானி தவறான தகவல் அளித்ததாக கடந்த 2014-இல் சா்ச்சை எழுந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸ் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரா். இவா் பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டவா்.

இந்நிலையில், ‘பட்டப் படிப்பை இருவரும் முடிக்கவில்லை - இனி என்ன செய்வது?’ என்று தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி வெளியிட்ட படம் சமூக ஊடகங்களில் ஏராளமானோரால் பகிா்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT