இந்தியா

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில், தில்லி உயா் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT