இந்தியா

பிபிசிஎல், எஸ்சிஐ, கான்காா் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

பொதுத் துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கான்காா் ஆகிய நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாட்டின் இரண்டாவது பொதுத் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷனில் (பிபிசிஎல்) அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோல், இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் (எஸ்சிஐ) அரசு வசமுள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்திய சரக்குப் பெட்டக கழகத்தில் (கான்காா்) அரசு வசமுள்ள 54.80 சதவீத பங்குகளில் 30.9 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுகளை, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT