இந்தியா

நீங்கள் தில்லிவாசி என்றால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதைப் படியுங்கள்!

DIN


அனைவருக்கும் நீண்ட ஆயுளே விருப்பமாக இருந்தாலும், அவசரகாலம் அறிவிக்கும் அளவுக்கு காற்று மாசினால் பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களில் வாழும் மக்களின் ஆயுள் எப்படி இருக்கும்?

ஆம், ஒவ்வொரு ஆண்டும் தில்லி போன்ற நகரங்களில் உயரும் காற்று மாசு, அங்கு வாழும் மக்களின் ஆயுளைக் குறைப்பதாக அபாய மணி ஒலிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு காரணமாக, அதனை சுவாசிக்கும் மக்களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறையும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

தற்போது தில்லியில் வாழும் மக்கள், சாதாரண மக்கள் சுவாசிக்கும் கெட்ட காற்றை விட 25 மடங்கு அதிகமான கெட்ட காற்றை சுவாசிக்கிறார்கள்.  இதே அளவுக்கு கெட்ட காற்று தில்லியில் ஆண்டு முழுக்க நீடிக்காது என்றாலும், மிக மோசமான காற்று மாசினால், தில்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலம், நிர்ணயிக்கப்பட்டதை விட, 17 ஆண்டுகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கடந்த 2016ம் ஆண்டு மிக மோசமான காற்று மாசு குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், தில்லியில் வாழும் மக்கள், அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை விட 10 ஆண்டுகள் குறைவாக வாழும் நிலை ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு முழு ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், 2019ம் ஆண்டு ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக இது 17 ஆண்டுகளாகக் அதிகரித்திருப்பது, கடந்த மூன்றே ஆண்டுகளில் காற்று மாசு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

சரி, காற்று மாசு அப்படி என்னதான் செய்யும் என்றால்.. மனிதனின் தலைமுடியின் அளவில் 3 சதவீத அளவில் இருக்கம் காற்றில் கலந்திருக்கும் மாசானது, ரத்த நாளங்களில் தொடர்ந்து சென்றடையும் போது, அது அங்கே ஒன்றாக இணைந்து ஒரு புள்ளியாக (கிளாட்) உருவாகிவிடும். இதனால், ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதன் காரணமாகவும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட சில நோய்கள் தாக்கக் கூடும். இதுபோன்ற காரணங்களால், மக்களின் ஆயுள் குறையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், நீரழிவு உள்ளிட்ட நோய்கள் வரக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT