இந்தியா

பாஜக-வின் ஆட்டம் முடிந்துவிடும், 30 நிமிடங்களில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்: சஞ்சய் ரௌத், நவாப் மாலிக் பேட்டி

DIN

மகாராஷ்டிர அரசியலில் பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. 

இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறுகையில், சத்தியம் வென்றுள்ளது. 30 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜக-வுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. ஆனால், எங்களால் 30 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது, உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இந்த உத்தரவானது நாட்டின் ஜனநாயகத்தின் மைல்கல்லாகும். நாளை 5 மணிக்குள் பாஜக-வின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். அடுத்த சில நாட்களில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனை கூட்டணி ஆட்சி மலரும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT