இந்தியா

மகாராஷ்டிர அரசியல் குறித்து 99 நாட்களாக சிறையில் இருக்கும் சிதம்பரம் சொன்னது

PTI


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 99 நாட்களாக சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகாராஷ்டிர அரசியல் குறித்து பேசியிருக்கிறார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கடந்த 99 நாட்களாக திகார் சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரம், வெளியே வந்த போது கூறியதாவது, மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நாடகங்கள் அனைத்துக்கும் மாநில ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர்தான் பொறுப்பு.

மகாராஷ்டிர அரசியலில் பாஜக கண்ட தோல்விதான் அரசியல் சாசன தினத்தில் கிடைத்த பெரிய மரியாதை.  

நள்ளிரவில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் மகாராஷ்டிர ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய அனைவரும்தான் பொறுப்பு.

அதிகாலை 4 மணிக்கெல்லாம் குடியரசுத் தலைவரை எழுப்பியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது சிதம்பரம் கூறிக் கொண்டே வந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT