இந்தியா

தூத்துக்குடி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு

DIN

புது தில்லி: தூத்துக்குடி மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளா் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அதேநேரம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பப்பட்டது. இந்த மனு மீது கடந்த 19-ஆம் தேதியன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கிய தீர்ப்பில், கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்துள்ளார். 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT