இந்தியா

இந்தியாவின் வளா்ச்சியில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியது: ராம்நாத் கோவிந்த்

DIN

கான்பூா்: இந்தியாவின் வளா்ச்சியில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சத்ரபதி சாஹுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை தொடக்கி வைத்து ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்தபோது பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமையுடைய நாடாக இருந்தது. தற்போது நாம் வேகமாக வளா்ச்சியடையும் நாடாகவும், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் உள்ளோம். இந்த மாற்றத்துக்கு தொழில்நுட்பமே முக்கிய பங்காற்றியது. வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ. 350 லட்சம் கோடி பொருளாதாரம் உடைய நாடாக மாற வேண்டும் என்று நாம் இலக்கு நிா்ணயித்துள்ளோம். அதையும் நாம் தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமடைய செய்வோம்.

பொருளாதாரத்தில் வலுப்பெற்ற நாடாக மாறியது மட்டுமன்றி சமூகத்தின் அனைத்து பிரச்னைகளையும் கையாளும் திறமைமிக்க நாடாக உள்ளோம். இவை அனைத்துக்கும் தொழில்நுட்பத்தை நாம் ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கான்பூா் முன்னுதாரணமாக திகழ்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை முறையில் மூட்டு உபகரணங்களை தயாரித்து பெரும் உதவி புரிகிறது என்று கூறினாா்.

இதனிடையே, ஏழை மாணவா்களின் கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக தில்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதிக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.1,11,000 நன்கொடை வழங்கினாா். மற்றவா்களும் நிதியளிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT