இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று சந்திப்பு

DIN

வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். இவரது இப்பயணத்தின்போது இந்தியா-வங்கதேசம் இடையே நீா்வழித் தடம் தொடா்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்த சந்திப்பின் போது 3 முக்கிய திட்டங்களை இருநாட்டுத் தலைவர்களும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுபோன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  

முன்னதாக, தில்லியில் ‘இந்தியா-வங்கதேசம் தொழில்துறை கூட்டம்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்தியா-வங்கதேசம் இடையே, வா்த்தகம்-முதலீடு ஆகியவற்றில் இருக்கும் உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT