இந்தியா

ஃபரூக் அப்துல்லாவைச் சந்திக்க அனுமதி: ஸ்ரீநகர் விரைகிறது தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு

DIN


தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க அக்கட்சிக்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவைச் சந்திக்க அக்கட்சியின் ஜம்மு மாகாணத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் ஒரு குழு நாளை ஸ்ரீநகர் விரைகிறது. இதற்கான அனுமதியை தேவேந்திர சிங் ராணா, ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் பெற்றுள்ளார். 

இதுகுறித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மதன் தெரிவிக்கையில், "தேவேந்திர சிங் ராணா தலைமையில் கட்சியின் இரண்டு முன்னாள் எம்எல்ஏ-க்கள் நாளை காலை ஜம்முவில் இருந்து புறப்படுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு பிராந்திய மாவட்டத் தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லாவைச் சந்திப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT