இந்தியா

மெஹபூபா முஃப்தியைச் சந்திக்கும் பிடிபி கட்சிக் குழு: காஷ்மீர் நிர்வாகம் அனுமதி

DIN


ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியைச் சந்திக்க பிடிபி கட்சியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவுக்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 

மெஹபூபா முஃப்தியைச் சந்திக்க அவரது மகள் இல்டிஜாவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் அனுமதியளித்தது. அதன்பிறகு, அவரை யாரும் சந்தித்ததாகத் தகவல் இல்லை.

இந்நிலையில், வீட்டுக் காவலில் இருக்கும் ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவைச் சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சியின் தேவேந்தர் ராணா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் அனுமதியளித்தார். இதன்பேரில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த குழு இன்று ஃபரூக் அப்துல்லாவைச் சந்தித்தது.

இதைத்தொடர்ந்து, பிடிபி கட்சியினரும் மெஹபூபா முஃப்தியைச் சந்திக்க ஆளுநரிடம் அனுமதி கோரினர். இதற்கு ஆளுநர் சத்யபால் மாலிக் அனுமதியளித்ததையடுத்து, 10 பேர் கொண்ட பிடிபி கட்சிக் குழுவினர் நாளை மெஹபூபா முஃப்தியைச் சந்திக்கவுள்ளனர். இதுகுறித்து பிடிபி கட்சியைச் சேர்ந்த ஃபிர்டஸ் டக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், 

"எங்கள் கட்சித் தலைவரைச் சந்திக்க இன்று காலை ஆளுநரிடம் அனுமதி கோரினோம். எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. காஷ்மீரில் நிலவும் தற்போதையச் சூழல் உள்பட பல்வேறு விவகாரம் குறித்து மெஹபூபா முஃப்தியிடம் ஆலோசனை நடத்தவுள்ளோம். அவரும், பிற கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆயிற்று" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT