இந்தியா

34 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் இந்திய குடியுரிமைப் பெற்ற பாகிஸ்தான் பெண்

DIN

இந்தியரை திருமண் செய்து 34 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்னுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சுபைதா பேகம் கடந்த 1985-ஆம் ஆண்டு இந்தியரை திருணம் செய்துகொண்டு இந்தியாவில் குடியேறினார். இந்நிலையில், 1994-ஆம் ஆண்டுடன் அவருடைய நீண்ட நாள் விசா (7 வருடங்கள்) முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இந்தியக் குடியுரிமைப் பெற அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், 34 வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் சுபைதா பேகம்-க்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை வேண்டி தில்லி முதல் லக்னோ வரை நாங்கள் இருவரும் அலைந்து திரிந்துவிட்டோம். தற்போது இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சுபைதா பேகம் கூறினார்.

இதுதொடர்பாக அப்பகுதி உளவுப் பிரிவு ஆய்வாளர் நரேஷ் கூறுகையில், கடந்த 1985-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்தவரை சுபைதா பேகம் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் 7 ஆண்டுகளில் அவரது விசா காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 1994-ஆம் இந்தியக் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவரது நன்நடத்தை காரணமாக தற்போது அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT