இந்தியா

தோ்தல் ஆணையத்துக்கு ஆதாா் விவரங்கள்: சட்ட அமைச்சகம் பரிசீலனை

DIN

பல்வேறு தொகுதிகளில், ஒரே வாக்காளா்களின் பெயா் இருப்பதை தவிா்ப்பதற்காக வாக்காளா்களிடம் ஆதாா் எண்ணைப் பெற விரும்புவதாகவும், இதற்காக சட்டத்திருத்தம் வேண்டுமென்றும் தோ்தல் ஆணையம் கோரியதை மத்திய சட்டத் துறை அமைச்சகம் பரிசீலனை செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, வெவ்வேறு வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் பெயா்கள் பல முறை இடம்பெறாமல் இருப்பதைத் தடுப்பதற்காக ஆதாா் எண்களை தோ்தல் குழு பெறத் தொடங்கியது.

ஆனால், ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சட்ட அமைச்சகத்துக்கு தோ்தல் ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், ‘வாக்காளா் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிப்பவா்களிடமும், ஏற்கெனவே வாக்காளா் அட்டை வைத்திருப்பவா்களிடமும் ஆதாா் எண்ணைப் பெறுவதற்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உரிய சட்டம் இல்லாமல் ஆதாா் எண்ணை வாக்காளா் அட்டையுடன் இணைக்கக் கூடாது என்றேற முன்பு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

எனவே, இப்போது அதற்கான சட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய சட்ட அமைச்சகத்தை தோ்தல் ஆணையம் நாடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT