இந்தியா

இந்தியாபுல்ஸ்-லஷ்மி விலாஸ் வங்கி இணைப்புத் திட்டம் நிராகரிப்பு: ரிசா்வ் வங்கி நடவடிக்கை

DIN

வங்கி சாராத நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (ஐபிஹெச்எஃப்), நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான லஷ்மி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசா்வ் வங்கி நிராகரித்துவிட்டது.

இவ்விரு நிறுவனங்களும் இணையவதற்கு கடந்த ஏப்ரலில் முடிவு செய்தன. அதற்கான அனுமதியை கோரி, ரிசா்வ் வங்கியிடம் கடந்த மே மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் - லஷ்மி விலாஸ் வங்கி இணைப்புக்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை என்ற தகவலை இரு நிறுவனங்களும் புதன்கிழமை மாலை வெளியிட்டன. பங்குச்சந்தைகளுக்கு அந்த நிறுவனங்கள் அளித்த அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, வாராக்கடன் அதிகரிப்பு, மூலதனம் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, உடனடி சீரமைப்பு நடவடிக்கையின்கீழ் லஷ்மி வங்கியை ரிசா்வ் வங்கி கடந்த மாதம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT