இந்தியா

மாடர்ன் உடைகளை அணிய மறுத்தால் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

DIN

மது குடிக்க மறுத்ததாலும், மாடர்ன் உடைகளை அணிய மறுத்தாலும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூரி பாத்திமாவுக்கும், இம்ரான் முஸ்தபா என்பவருக்கும்  கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் இருவரும் வேலை நிமித்தம் காரணமாக டெல்லிக்குச் சென்று வசித்து வருகின்றனர்.

அங்கு பல மாடர்ன் பெண்களை பார்த்துவிட்டு 'நீயும் அவர்களைப் போல மாடர்ன் உடைகளை அணிந்துகொள்ள வேண்டும்' என்று பாத்திமாவை முஸ்தபா அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். அவ்வப்போது ஹோட்டல்களுக்கும் அழைத்துச் சென்று விழாக்களில் மது அருந்தச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், பாத்திமாவுக்கு இதில் உடன்பாடு இல்லாததால் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். 

இந்நிலையில், ஒரு கட்டத்தில் தான் கூறியதைச் செய்யாததால் வீட்டை விட்டு வெளியேறுமாறு முஸ்தபா கூறவே, பாத்திமா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த முஸ்தபா, மூன்று முறை தலாக் கூறி பாத்திமாவை விவாகரத்து செய்துள்ளார். கணவரின் கொடுமையால் பாத்திமா இரண்டு முறை வயிற்றில் இருந்த கருவையும் கலைத்துள்ளார். 

கணவர் விவாகரத்து செய்ததையடுத்து, பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், பீகார் மாநில மகளிர் ஆணையமும் இதுகுறித்து விசாரித்து வருகிறது. 

இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இருந்த போதிலும், முஸ்லீம் பெண்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT