இந்தியா

மூழ்கும் கப்பலை விட்டு வெளியேறிய கேப்டன் ராகுல், முத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது: ஓவைஸி

முத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார்.

DIN

முத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைஸி பேசியதாவது,

ஒரு கப்பல் நடுக்கடலில் மூழ்கும் போது, அதிலிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் ஒரு கேப்டனின் பொறுப்பு. ஆனால், காங்கிரஸ் எனும் கப்பல் மூழ்குவதைப் பார்த்த பின்பும் அதனை தவிக்கவிட்டு, சுயநலத்துடன் தனது பாதுகாப்புக்காக வெளியேறிய கேப்டன் தான் ராகுல்.

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் காங்கிரஸ் தயவில் முஸ்லிம்கள் வாழவில்லை. அதற்கு நாட்டின் அரசியலமைப்பும், அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை சக்தியும் தான் காரணம்.

முத்தலாக் தடை விதித்தது முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. அதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாஜக மேலும் நீண்டகாலம் ஆட்சி செய்யும் என்பதால், இந்த இருளும் நீடிக்கும். 

பாஜக முஸ்லிம்களுக்கு உண்மையாகவே நன்மை செய்ய விரும்பினால், மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது போன்று முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT