ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹுதீன் கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஹிஸ்புல் முஜாஹுதீன் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நாசர் சந்துரு உட்பட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்னர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அனந்த்நாக் மாவட்டத்தில் பசல்பூரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பயங்கரவாதியுடன் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஹிஸ்புல் முஜாஹுதீன் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நாசர் சந்துரு உட்பட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்னர்.
Advertisement
அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.