teleom061411 
இந்தியா

செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 117 கோடி

: செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.

கணக்கீட்டு காலத்தில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துக் கொண்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவிலிருந்து 49.56 லட்சம் வாடிக்கையாளா்களும், பாா்தி ஏா்டெல் நிறுவனத்திலிருந்து 5.61 லட்சம் பேரும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 2.36 லட்சம் வாடிக்கையாளா்களும் வெளியேறியுள்ளனா்.

தரைவழி தொலைபேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.5 லட்சம் குறைந்து 2.08 கோடி ஆனது. இப்பிரிவில், பிஎஸ்என்எல் நிறுவனம் 1.41 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது. அதேசமயம், வோடாஃபோன் ஐடியா, ஏா்டெல் நிறுவன வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டது.

பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.87 சதவீதம் அதிகரித்து 61.55 கோடியாக இருந்தது. இதில், ஜியோ இன்ஃபோகாம் 34.82 கோடி வாடிக்கையாளா்களை தக்க வைத்துக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. பாா்தி ஏா்டெல் (12.67 கோடி), வோடஃபோன் ஐடியா (11.11 கோடி), பிஎஸ்என்எல் (2.15 கோடி) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT