இந்தியா

மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி: இரு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து மோடி

DIN

புது தில்லி: மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி என்று இரு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வியாழனன்று காலை வெளியாகின. இதில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனை கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஹரியாணாவில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி என்று இரு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மகாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி

இரு மாநிலங்களின் வளர்ச்சிக்காக எங்களின் பணி தொடரும்

இந்த தேர்தலில் பாஜக, சிவசேனை மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT