இந்தியா

ஒருவர் நடந்துகொண்டிருக்கும்போதே சரிந்த நடைபாதை: திடுக்கிட வைக்கும் விடியோ

பாதாளச் சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சரிந்து விழுந்த விபத்துக்குள்ளான அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

DIN

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனுமிடத்தில் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போதே அப்பகுதியில் பாதாளச் சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சரிந்து விழுந்த விபத்துக்குள்ளான அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

இதில் அங்கிருந்த மற்றொருவரும் நிலை தவறி பள்ளத்தில் விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு இரு சக்கர வாகனமும் அந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது. 

திடுக்கிட வைக்கும் இந்த விடியோப் பதிவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT