இந்தியா

ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மீன்கள்!

DIN


ராஞ்சியில் உள்ள குளம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்துள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் சதாரி பகுதியில் லைன் டேங் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். துர்கா சிலைகளை கரைத்ததும், தீபாவளியுமே இந்த மீன்களின் உயிரிழப்புக்குக் காரணம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர் நிதிஷ் பிரியதர்ஷி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

"நான் இன்று லைன் டேங்க் குளத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துக் கொண்டிருந்தன. கடந்த சில நாட்களாக அந்த மீன்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் திணறியுள்ளனர். சிலைகளை கரைத்ததாலும், தீபாவளியினாலும் ஏற்பட்ட ஆக்ஸிஜன் குறைபாடே இதற்குக் காரணம்.

துர்கா சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு குளம் சுத்தம் செய்யப்படவில்லை. நீரோட்டமும், ஆக்ஸிஜனும் இல்லாத காரணத்தினால் மீன்கள் உயிரிழந்துள்ளன" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT