இந்தியா

ஐஎன்எக்ஸ் வழக்கு: உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு

DIN

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இடைக்கால ஜாமீன் கோரி ஐஎன்எக்ஸ் வழக்கில், தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று சிதம்பரம் தரப்பில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன். படேல், நீதிபதி சி. ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு, சிதம்பரத்தின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்குமாறு  கோரிக்கை வைத்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இன்றுடன் அவருக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத் துறை காவல் முடிவடைவதால் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT