இந்தியா

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக தத்தாத்ரேய பட்சல்கிகா் நியமனம்

DIN

மும்பை காவல்துறை முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகா் (61), தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் விரைவில் பொறுப்பேற்க இருக்கிறாா்.

1982-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பட்சல்கிகா், 26 ஆண்டுகளாக ‘ஐபி’ உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவராவாா். மும்பை காவல்துறை ஆணையராக 2016-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பட்சல்கிகா், கடந்த ஆண்டில் ஓய்வுபெற்றாா்.

உளவுத் துறையில் பணியாற்றியபோது, தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் பட்சல்கிகா் இணைந்து பணியாற்றியுள்ளாா்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பட்சல்கிகரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மகாராஷ்டிர காவலா்களுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக பட்சல்கிகா் மாற்றி அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT