இந்தியா

என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள்: மத்திய அரசு

DIN


என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை கண்டறிவதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வரைவு அறிக்கை கடந்தாண்டு ஜூலை மாதம் வெளியான நிலையில், அதில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, என்ஆர்சி வரைவு அறிக்கையில் விடுபட்டவர்களின் பெயர்களை இணைப்பதற்கானப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. 

இதன்முடிவில் நேற்று என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். மேலும் இதில் இடம்பெறாததன் மூலம், அவர்கள் நாடற்றவர்களாகவோ, வெளிநாட்டினராகவோ ஆக்கப்படவில்லை. இதுவரை அனுபவித்து வந்த அனைத்து உரிமைகளையும் அவர்கள் தற்போதும் அனுபவிக்கலாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT