இந்தியா

ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டம்: ராஜஸ்தானில் இன்று தொடக்கம்

DIN


ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் ஒருங்கிணைப்புக் கூட்டம் ராஜஸ்தான்  மாநிலம் புஷ்கரில் சனிக்கிழமை தொடங்குகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்வேறு துணை அமைப்புகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அந்த அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களும், பாஜக சார்பில் செயல் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர்.
தேசியப் பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீரில் நிலவும் சூழல், எல்லையில் நிலவி வரும் பதற்றம், அயோத்தி ராமர் கோயில் விவகாரம், இந்திய சமூகத்தில் பெண்களின் மேம்பாடு, நீர் வளப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, தேசப் பணியில் இளைஞர்களின் பங்கை அதிகரிப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் அருண் குமார் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சீமா ஜாக்ரண் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எல்லையில் உள்ள சூழல் குறித்து கூட்டத்தில் விவரிப்பார்கள். நாட்டில் இப்போது நிலவி வரும் பொருளாதார சுணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் குறித்து சுதேசி ஜாக்ரண் மஞ்ச், பாரதிய மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவாதிக்க இருக்கின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் வழக்கு விசாரணை இப்போது உச்சநீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அது தொடர்பான விவரத்தையும், வழக்கு விசாரணையின் போக்கு குறித்தும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கூட்டத்தில் விவரிப்பார்கள். 35-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் இனப் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும், நாட்டில் அதிகரித்து வரும் சமூகப் பிரச்னைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் இதுவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT