முகப்பு
இந்தியா

நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு

ஒப்பந்த தொழிலாளர்கள் இனி நிரந்தர தொழிலாளர்களின் பணிக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என்ற மத்திய அரசு அறிவிப்பால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:02 AM
பகிர்:


ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மத்திய அரசு  இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும்.

தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது. 

ஒரு வேலை நிரந்தர தொழிலாளர்களின் வேலையும், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலையும் வெவ்வேறாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் ஊதியம் தொடர்பாக என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதையே கடைபிடிக்கலாம்.

ஒப்பந்த தொழிலாளர்கள் இனி நிரந்தர தொழிலாளர்களின் பணிக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.