இந்தியா

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்படாது: அமித் ஷா

DIN


சட்டவிரோதமாகக் குடியேறிவர்கள் இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சட்டவிரோதமாகக் குடியேறிவர்கள் இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தார். அஸ்ஸாமில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க: அஸ்ஸாம் என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்

"என்ஆர்சி குறித்து மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். சட்ட விரோதமாகக் குடியேறிய ஒருவர் கூட இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்படாது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படும் என்று வடகிழக்கு மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படும் என்று வடகிழக்கு மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்ப்பது சூழ்ச்சியாகும். 

நான் நாடாளுமன்றத்திலேயே இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளேன். இருந்தபோதிலும், தற்போதும் மீண்டும் தெரிவிக்கிறேன், சட்டப்பிரிவு 371-ஐ மத்திய அரசு ரத்து செய்யாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT