இந்தியா

விக்ரம் லேண்டரின் புகைப்படங்கள் விரைவில் வெளியீடு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் 

DIN

சென்னை: நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், சனிக்கிழமை அதிகாலை தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

அதைத்தொடர்ந்து பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ ஞாயிறு மாலை உறுதிபடத் தெரிவித்தது.

திடீர் திருப்பமாக  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஞாயிறு மதியம் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள முதல்கட்ட தகவலின்படி, 'தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எங்கே விழுந்துள்ளது  என்பது குறித்து ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களின் வாயிலாகத் தெரிந்துள்ளது. ஆனால் அதன் ஆன்டெனா வழியாக அதனுடனான தகவல் தொடர்பை உடனடியாக உருவாக்க முடியவில்லை ' என்று தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே நமபிக்கை ஏற்பட்டுள்ளது.   

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

கீழே விழுந்துள்ள விக்ரம் லேண்டர் சேதமடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, ஆர்பிட்டர் வழியாக தகவல் தொடர்பினை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளபப்டும் என்று தெரிகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT