திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம் 
இந்தியா

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை: ப. சிதம்பரம் டிவீட்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று திகார் சிறையில் இருக்கும் மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று திகார் சிறையில் இருக்கும் மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப. சிதம்பரம்.

இந்த நிலையில், தனது கருத்துகளை குடும்பத்தாரிடம் சொல்லி அவர்கள் மூலமாக டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை இட்டுள்ளார்.

அதில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றியிருக்கும் நிலையில், அவர்கள் யாருமே கைது செய்யப்படவில்லையே? நீங்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறீர்களே? கடைசியாக கையெழுத்திட்டது நீங்கள்தான் என்பதாலா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

எந்த அதிகாரியும் ஒரு சிறு தவறு கூட செய்யவில்லையா? யாரும் கைது செய்யப்பட வேண்டும் என்பது எனது விருப்பமல்ல. ஆனால், அதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று சிதம்பரத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT