முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

Updated On : 10 செப்டம்பர் 2019, 8:22 am IST
கோபுப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியது மற்றும் சமீபத்தில் அங்கு நடந்த சில பொதுமக்களின் உயிரிழப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதிகள் 8 பேர் பிடிபட்டுள்ளனர்.

அஜிஸ் மிர், ஒமர் மிர், தஸீப் நஜர், இமிதியாஸ் நஜர், ஒமர் அக்பர், பைஸன் லதீப், தானிஷ் ஹபீப் மற்றும் சௌகத் அகமது மிர் ஆகிய 8 பயங்கரவாதிகள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கணினி, சுவரொட்டி தயாரிப்பு இயந்திரம், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.