இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அரசிடம் சிறப்பு உத்தி: வி.கே.சிங் தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

DIN


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
அவர் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடவடிக்கை எடுக்க முப்படைகளும் தயார் என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்றும் ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்து வி.கே.சிங் கூறுகையில் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்புட்குழி மணிகண்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்

குறைந்து வரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிா்லா கவலை

4 மாதத்தில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை மூலம் மீட்பு: அரசு மருத்துவா்கள் சாதனை

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி கடன்: சென்ட்ரல் வங்கி

SCROLL FOR NEXT