முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 
இந்தியா

அமலாக்கத்துறையில் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி 

அமலாக்கத்துறையில் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

DIN

புது தில்லி: அமலாக்கத்துறையில் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதையடுத்து, வரும் 19-ஆம் தேதி வரை தில்லி திகார் சிறையில் அவரை அடைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையிடம் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT