இந்தியா

மோடி நலமா? நிகழ்ச்சிக்கு அமெரிக்க முஸ்லிம் அமைப்பு பேராதரவு

DIN


அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கும் மோடி நலமா? என்ற பெயரிலான மாநாட்டுக்கு அங்குள்ள இந்திய-அமெரிக்கர்கள் முஸ்லிம் அமைப்பு பேராதரவு அளித்து வருகிறது.
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை மோடி உரையாற்றவுள்ளார். 
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி மோடி உரையாற்றவுள்ளார். மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய -அமெரிக்கர்கள் முஸ்லிம் அசோசியேஷன் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் கூறுகையில், மத கொள்கைகள், நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் ஆகியவை வேறுபடலாம். ஆனால் இந்தியர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். நான் பிரதமர் மோடியின் வாராணசி மக்களவைத் தொகுதியில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் தாய்நாட்டின் பிரதமர் நாங்கள் வசிக்கும் இடத்துக்கு வருகை தரும்போது, அவரை சிறப்பாக வரவேற்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. நான் இந்தியராக இருப்பதற்காகவும், முஸ்லிமாக இருப்பதற்காகவும் என்றுமே பெருமை கொள்வேன் என்றார்.
மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு முஸ்லிம் அமைப்பு பேராதரவு அளித்து வருவதற்கு அங்குள்ள ஹிந்து அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றது முதல், அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றவிருப்பது இது 3-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT