நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டர். 
இந்தியா

விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்?  இஸ்ரோ ஆய்வு 

விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

DIN

பெங்களூரு: விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வுகள் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரானது, நிலவின் மேற்பரப்பில் தரை இறங்க வேண்டிய தருணத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அதையடுத்து அதனுடனான தொடர்பினை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறு வந்தது. செப்டம்பர் 21-ஆம் தேதி வரைதான் நிலவின் குறிப்பிட்ட அந்தப்பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும் என்பதால் அதற்குள் ஏதாவது தகவலைப் பெற தீவிர முயற்சிகள் நடந்து வந்தது,

இந்நிலையில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், 'சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது. விக்ரம் லேண்டருடன் தொடர்பை இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT