கோப்புப்படம் 
இந்தியா

ஒரு நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும்: பிரதமர் மோடி 

பல நாட்டு தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

DIN

புது தில்லி: பல நாட்டு தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பையின் பொதுச்சபையில் உரையாற்றுவதற்காகவும் மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி ஒரு வார பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.

அதையொட்டி பல்வேறு விஷயங்கள் தொடர்பாகஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களாவன:

இது மாதமா காந்தியின்  150 ஆவது பிறந்த ஆண்டாகும். தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்

தற்போது ஐநாவில் இந்தியா நடத்த உள்ள காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

குளோபல் கோல்கீப்பர் என்னும் விரு தை எனக்கு வழங்கும் பில்கேட்சின் அமைப்புக்கு நன்றி. சமீப ஆண்டுகளாக இந்தியா பொதுசுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயலாற்றி வருகிறது. 

பல நாட்டு தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்வாய்ப்பாக எனது  அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு

மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தைத் தொடரும் எம்.பி. சசிகாந்த் செந்தில்!

உத்தமபாளையம்: இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்

ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் புதிய படம்!

இடிந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து! இந்திய ராணுவம் கட்டிய தற்காலிக பாலம்!

SCROLL FOR NEXT