இந்தியா

மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்?

DIN


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த ஆட்சியில் முடிவு செய்தது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக மக்களவைத் தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தன. இருந்தபோதிலும், அது அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. 

இந்த ஒப்பந்தத்தின்படி முதல் ரஃபேல் போர் விமானம் அண்மையில் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி பிரான்ஸ் செல்லவுள்ளார். அப்போதுதான் முதல் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப் படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகிறது. 

இந்நிலையில், மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியா வசம் இருக்கும் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 72 ஆக உயரவுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து அழுத்தம் இருந்தாலும், எஃப்-21 போர் விமானத்தை கொள்முதல் செய்யவும் இந்தியா விரும்புகிறது. அதுமட்டுமின்றி, ரஃபேல் போர் விமானத்துடன் போயிங் எஃப்-18 வாங்கும் திட்டமும் இந்திய விமானப் படைக்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 18 சு-30 எம்கேஐ போர் விமானங்கள் மற்றும் 21 மிக்-29 போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யவும் இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது. அண்மையில், ரஷியா சென்றிருந்த பிரதமர் மோடி இதற்கானப் பணியை துரிதப்படுத்தியிருந்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குச் சென்று இந்திய விமானப் படையினர் வான்வழி தாக்குதல் மூலமாக பயங்கரவாத முகாம்களை அழித்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய வான் எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் முற்பட்டது. இதுபோன்ற சூழல்களில், கூடுதல் போர் விமானங்களை கொள்முதல் செய்து இந்திய விமானப் படையை பலப்படுத்துவது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT