இந்தியா

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிய வேண்டும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு கிராமப்புறப் பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ENS

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு கிராமப்புறப் பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

லக்னோவில் ஆயுஷ்மான் பாரத் திவாஸின் முதலாமாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'அரசுக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள் உயர் படிப்புக்கு செல்லவில்லை என்றால், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்ற வேண்டும்.

எம்.டி மற்றும் எம்.எஸ் என மருத்துவ உயர்படிப்புக்குச் செல்பவர்கள் கட்டாயமாக ஒரு வருடமாவது கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது' என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் மூலமாக சுமார் 1.18 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன, முதல்வர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மூலம் 8.45 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 1.89 லட்சம் மக்களுக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக கோல்டன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகும்' என்று கூறினார். 

மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1947 முதல் 2012 வரை 12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசு அமைத்து வருகிறது, அவற்றில் ஏழு கல்லூரிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT