இந்தியா

அமெரிக்க எம்.பி.யின் மனைவியிடம் மன்னிப்புக் கோரிய மோடி!

DIN


ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினர் ஜான் கோர்னியின் மனைவி சாண்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.
 மோடி நலமா  நிகழ்ச்சி நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை (செப்படம்பர் 22) சாண்டியின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் முழுவதும் ஜான் கோர்னி, மோடியுடன்தான் இருந்தார். இதனால், மனைவியின் பிறந்த தினத்தில் அவருடன் இருக்க முடியவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி தன்னை மன்னித்துவிடுமாறு சாண்டியிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பான விடியோ பிரதமர் அலுவலக சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நேரடியாக எம்.பி. ஜான் கோர்னியின் மனைவியின் சாண்டியின் பெயரைக் குறிப்பிட்டு மோடி பேசினார். அப்போது, வளத்துடனும், அமைதியுடனும் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக குறிப்பிட்டதுடன், உங்கள் பிறந்தநாளின் உங்கள் கணவர் உங்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போனதற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன். அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறினார். அப்போது, ஜான் கோர்னி புன்னகையுடன் மோடி அருகில் நின்று கொண்டிருந்தார்.
ஜான் கோர்னி - சாண்டி தம்பதிக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தனது நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி.யின் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்து, அது தொடர்பாக அனைவர் முன்னிலையிலும் மோடி பேசியதை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் வியப்புடன் வரவேற்று ஆரவாரம் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சியின் எம்.பி.க்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT