கோப்புப்படம் 
இந்தியா

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா: மன்மோகன் சிங்குக்கு பாக்., அழைப்பு

கர்தார்பூர் வழித்தடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

DIN


கர்தார்பூர் வழித்தடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.  

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்நிலையில் இதன் திறப்பு விழாவில் பங்கேற்க மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 

"இந்த திறப்பு விழாவுக்கு நாங்கள் மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இதற்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர் மிகுந்த மரியாதைக்குரியவர். அதேசமயம், அவர் சீக்கிய மதத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் அரசு சார்பாக, நான் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். எழுத்துப்பூர்வமாகவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படும். அனைத்து சீக்கிய யாத்ரீகர்கள் கர்தார்பூர் வர வேண்டும். குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விழாவில் அவர்கள் பங்கேற்க வேண்டும்" என்றார்.

ஆனால், பாகிஸ்தானின் இந்த அழைப்பை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT