இந்தியா

கரோனா: தலைமை நீதிபதி உள்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.50,000 நிதி

DIN

கரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக, தலைமை நீதிபதி உள்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தலா ரூ.50,000 நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர். 

கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, ‘பிஎம் கோ்ஸ்’ என்ற பெயரில் பிரதமரின் அவசர கால நிதி உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் கரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று, அரசியல் தலைவா்கள், பிரபலங்கள், தொழில்துறையினா் என பலரும் நிதி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 33 பேரும் தலா ரூ.50,000 பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT