இந்தியா

கேரளத்தில் கர்ப்பிணிக்கு கரோனா: முதல்வர் பினராயி விஜயன்

DIN

கேரளத்தில் கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,965-ஆக அதிகரித்துள்ளது. 50 பேர் பலியாகினர். 151 பேர் குணமடைந்தனர். இந்த நிலையில் கேரளத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

மேலும் அதில் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியும் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார். இத்துடன் கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT