முகப்பு
இந்தியா

கரோனா: வரும் 8ஆம் தேதி அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன், பிரதமர் மோடி வரும் 8ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன், பிரதமர் மோடி வரும் 8ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் கரோனாவுக்கு 2902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 184 பேர் குணமடைந்த நிலையில் 68 பேர் பலியாகினர். 

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இந்தச் சூழலில் பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக சில அறிவுறுத்தல்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் 5 எம்பிக்களுக்கு மேல் உறுப்பினர்களை கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன், பிரதமர் மோடி வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சச்சின், தோனி, கோலி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →