இந்தியா

ஆந்திரத்தில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி: பாதிப்பு 266 ஆக உயர்வு 

PTI

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இரவு வரை புதிதாக 14 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை இத்தகவலை உறுதி செய்துள்ளது.

கடந்த சில நாட்களில் கரோனா பாதித்த ஐந்து பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திருப்பினர். இதுவரை மொத்தம் 19 பேர் கரோனாவால் பலியாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனந்தபுராமில் 64 வயதானவர் ஏப்ரல் 1ஆம் தேதி மக்காவிலிருந்து திரும்பினார். இவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 4ஆம் தேதி மருத்துவமனையில் இறந்தார். 

மச்சிலிபட்னத்தில் உள்ள 55 வயதான மற்றொரு நபர் கரோனாவுக்கு உயிரிழந்தார். கடந்த மாதம் ஒடிசாவிலிருந்து ரயிலில் திரும்பிய அவர் ஏப்ரல் 2ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குமாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கர்னூல் மாவட்டத்தில் 56 பேர் கரோனா பாதித்து முதலிடத்திலும், எஸ்.பி.எஸ்.நெல்லூரில் 34 பேர் பாதித்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT