இந்தியா

கரோனாவுக்கு எதிரான போரில் ஐந்து முக்கிய திட்டங்கள்: தில்லி முதல்வர் கேஜரிவால்

IANS

புது தில்லி: தில்லியில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, தில்லி அரசு ஐந்து முக்கியத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த இருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

அதாவது பரிசோதனை, கண்டுபிடிப்பது, சிகிச்சை, குழுவாக பணியாற்றுதல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, கண்காணித்தல் உள்ளிட்ட ஐந்து பணிகளை தில்லி அரசு முடுக்கி விட்டிருப்பதாக கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இந்த முக்கிய திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துவதுடன், தில்லியில் சுமார் 30 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

தில்லி அரசு விரைவில் அதிவேக பரிசோதனை திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. பரிசோதனை செய்யாவிட்டால் யாருக்கு கரோனா இருக்கிறது? யாருக்கு கரோனா இல்லை என்பது எப்படி தெரியும். எனவே முதலில் பெரிய அளவில் தென்கொரியாவைப் போல பரிசோதனையை முடுக்கிவிட இருக்கிறோம்.

அதற்காக ஒரு லட்சம் பரிசோதனைக் கருவிகள் வெள்ளிக்கிழமை கிடைத்துவிடும். அதன் பிறகு கரோனா அதிகம் பரவிய பகுதிகளில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும்.

இதுபோல அனைத்து திட்டங்களையும் மிகத் தீவிரமாகவும், வேகமாகவும் செய்ய திட்டமிட்டுள்ளோம். கரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். சுமார் 27,702 பேரின் தொலைபேசி எண்கள் காவல்துறையிடம் வழங்கப்பட்டு, அவர்கள் அறிவுறுத்தியபடி நடந்து கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தில்லியில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது. தில்லியில் தற்போது கரோனா நோயாளிகளுக்காக மட்டும் சுமார் 3 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் தில்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT