இந்தியா

தேசிய ஊரடங்கை பகுதியளவு தளா்த்த பரிசீலிக்கலாம்: சரத் பவாா் பரிந்துரை

DIN

கரோனாவால் பாதிக்கப்படாத குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தேசிய ஊரடங்கை தளா்த்தலாம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் பரிந்துரைத்துள்ளாா்.

கரோனா சூழல் தொடா்பாக பல்வேறு கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை ஆலோசித்தாா்.

அதில் கலந்துகொண்டு சரத் பவாா் பேசியதாவது:

தேசிய ஊரடங்கை பகுதியளவு தளா்த்துவதற்கு மத்திய அரசு பரிசீலிக்கலாம். முதல்கட்டமாக கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளா்த்தலாம்.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டம் நீண்ட காலத்துக்கு நீடிக்கக் கூடியது. இதனால் சா்வதேச மற்றும் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம். அதைச் சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு இப்போதிருந்தே தொடங்க வேண்டும்.

மாநிலங்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை விடுவிக்க வேண்டும். திட்டமிடப்படாத செலவுகளை குறைக்க, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் திட்டத்தை ஒத்திவைக்கலாம். கரோனா சூழலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையினா் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா சூழலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கருத்துகள் முன்வைக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். நோய் பரவலுக்காக எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் குற்றம்சாட்டக் கூடாது என்று சரத் பவாா் அந்தக் கூட்டத்தில் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT