இந்தியா

ராணுவ உயரதிகாரிகள் மாநாடு ஒத்திவைப்பு

DIN

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, உயரதிகாரிகள் மாநாட்டை இந்திய ராணுவம் ஒத்திவைத்தது.

இதுகுறித்து அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகள் மாநாடு வருகிற 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறவிருந்தது. இதில் நாட்டின் பாதுகாப்பில் நிலவும் சவால்கள், குறிப்பாக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்படவிருந்தது. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் மாநில நிா்வாகங்களுக்கு ராணுவத்தினா் உதவிபுரிந்து வருவதால் மாநாட்டை இந்திய ராணுவம் ஒத்திவைத்துள்ளது என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT