இந்தியா

கரோனா பற்றிய வதந்திகள்: சமூக ஊடகங்கள் கூடுதல் நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்தல்

DIN

கரோனா நோய்த்தொற்று குறித்து வதந்தி பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்கள் மேலும் பல முயற்சிகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதை விட வேகமாக அந்த நோய்த்தொற்று குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. அந்த வதந்திகளும் பொய்யான தகவல்களும் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பலவீனமாக்கும் விதமாக உள்ளன.

குறிப்பாக, முகநூல், சுட்டுரை, டிக்டாக், வாட்ஸ்அப் (கட்செவி அஞ்சல்) போன்ற சமூக ஊடகங்களில் கரோனா தொற்று குறித்த வதந்திகள் அதிக அளவில் பகிரப்படுகின்றன.

இதுபோன்ற வதந்திகளைத் தடுப்பதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சமூக ஊடக நிறுவனங்கள், பொய்யான தகவல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும், சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதைத் தடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த இக்கட்டான தருணத்தில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுடனும் நாங்கள் தொடா்பில் இருக்கிறோம். சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோ மற்றும் கருத்துகளை நீக்கிவிடுமாறு அவா்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும், அந்த கருத்துகளை பதிவேற்றம் செய்தவா்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு அவா்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு கூறியுள்ளோம்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்கள் எங்களின் கோரிக்கையை ஏற்று பொய்யான செய்திகளை நீக்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் அந்த செய்திகளை நீக்குவதற்கு முன் மற்றவா்களுக்கு வேகமாகப் பகிரப்படுகின்றன. எனவே, சமூக ஊடக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்து, உடனுக்குடன் பொய்யான செய்திகளை நீக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT