இந்தியா

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன. எனினும், காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்த சண்டையில் இந்திய ராணுவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

முன்னதாக நேற்றிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT