இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரையிறக்கம்
தொழில்நுட்ப கோளாறு இந்திய விமானப்படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு இந்திய விமானப்படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்திலிருந்து இந்திய விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டர் இன்று புறப்பட்டது. சிறிதுநேரத்தில் அந்த ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் இந்தோராவுக்கு மேற்கே வயலில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. அதில் பயணித்த இரண்டு பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.